Monday, January 2, 2012

அறிவு.... is a Bad Word.

தினமும் எனது நான்கு வயது மகளை பள்ளிக்கு அழைத்து போகும்  பொழுது ஏதாவது பேசி கொண்டு போவது வழக்கம்.
அப்படி  ஒரு  நாள்...
 
நான்: ஒரு திருக்குறள் சொல்லி அர்த்தம் சொல்லட்டா?
மகள்: அப்படினா என்னா டாடி?
நான்: இரு சொல்லறேன்...
           தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தற்குக்
            கற்றனைத் தூறும் அறிவு.
           அப்படினா...கிணறு தோண்ட தோண்ட தண்ணி வர மாதிரி...
மகள்: கிணறு 'னா என்னா டாடி?
நான்: Well  கண்ணு.. நாம ஊருல பார்க்கல? பெரிசா இருக்கும் உள்ள தண்ணி இருக்குமே?
மகள்: ஓ...அதுல காசு போட்டமே அதுவா? அதுல தண்ணி already  இருக்குமே?
நான்: ஆமா..ஆனா நிறைய தண்ணி வேனும்ன நிறைய தோண்டனும்..அது மாதிரி நிறைய படிச்சா அறிவு நல்லா வளரும்..
மகள்: தோண்டனும் னா?
நான்: நாம பீச் க்கு போறப்போ மண்ணுல Shovel பன்னுவமே? அப்போ தண்ணி வரும் தானே?
மகள்: ஆமா..
நான்: அது மாதிரி நிறைய புஸ்தகம் படிச்சா அறிவு நல்லா வளரும்..
மகள்: டாடி...நீங்க Bad word சொல்லறீங்க...
நான்: Bad word  ஆ?
மகள்: அறிவு.. அம்மா என்னா திட்டரப்போ சொல்லுவாங்க...
நான்: Oh my god.. அது Bad word   இல்ல...அறிவு இருக்கான்னு சொல்லி திட்டறது...ம்ம்ம் எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கறது?
மகள்: புரிது டாடி... பீச் க்கு போன நல்லா படிக்கலாம்...Evening  கூட்டிட்டு போறீங்களா  டாடி?
நான்: ...............